மதுரை மத்திய சிறைச்சாலையில் 2016-2021ல் கைதிகள் தயாரித்த பல்வேறு பொருட்களுக்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்ததிலும், விற்பனை செய்ததிலும் நடந்த கோடிக்கணக்கான ஊழலில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் பற்றியும், லஞ்ச ஒழிப்புத்துறை யினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், கடந்த ஜனவரி 11-14 நக்கீரன் இதழில் "மத்திய சிறைச்சாலைகளில் ஊழல்! வசமாய் மாட்டிய உயர் அதிகாரிகள்!' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், "தவறு செய்பவர்களை சீர்திருத்துவ தற்கு சிறைக்கு அனுப்புகிறோம். சிறைத்துறை அதிகாரிகளே தவறிழைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பந்தப் பட்ட உயரதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முகாந்திரம் இருந்தால் சஸ்பெண்ட் உள்ளிட்ட துறைரீதியான நட வடிக்கை எடுக்கவேண்டும்'' ’எனத் தெரிவித்துள்ளனர்.
நம்மிடம் பெயர் குறிப்பிட விரும்பாத சிறைத்துறை அதிகாரி ஒருவர், "தமிழ்நாட்டில் அனைத்து மத்திய சிறைகளிலும் அந்தக் காலகட்டத்தில் ஊழல் நடந்திருப்பதை தணிக் கை ஆய்வு குறிப்பிட்டிருந்தது. இதன்மூலம் கோவை சிறையில் ரூ.2.02 கோடி, புழல் சிறை யில் ரூ.1.57 கோடி, திருச்சி சிறையில் ரூ.72.35 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. ஆனால், மதுரை, நெல்லை, கடலூர் மத்திய சிறைகளில் மட்டுமே முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. மற்ற மத்திய சிறைகளில் ஏனோதானோவென்று பெயரளவில் ஆய்வு நடந்தது. இதில் கொடுமை என்னவென்றால், நெல்லை, கடலூர் சிறைகளில் பெரிய அளவில் மோசடி நடந்தும், அதைக் கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறையினர், உயர் நீதிமன்றம் தலையிட்டும், மதுரை மத்திய சிறையை மட் டுமே குறிவைத்து, மோசடியில் தொடர்புடைய சில குறிப்பிட்ட அதிகாரிகள் மீது ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதன் பின்னணியில், வெளிச்சத்துக்கு வராத பல மர்மங்கள் உள்ளன''’என்றார் ஆதங்கத்துடன்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை..” என்று அவர் விவரித்த மர்மங்கள், சிறைத்துறை பெண் அதிகாரியின் அந்தரங்க வாழ்க்கையுடன் தொடர்புடையதால், சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. பெண் அதிகாரியின் தனிப் பட்ட விஷயங்கள் அவரது சொந்த விருப்பம் என்றாலும், சிறைத்துறையின் மாண்பினைச் சீர்குலைக்கும் விதத்தில் சிறைச்சாலையிலேயே அப்படி நடந்துகொண்டதால், அதனைச் சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகிறது.
மதுரை சிறைத்துறை ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது நீதியான செயல் என்றாலும், இதன் பின்னணியில் நேர்மையற்ற அதிகாரி ஒருவர் இருக் கிறார். அவருக்கு ‘செல்வராஜ்’ என்று பெயர் வைத்துக்கொள்வோம். இந்த செல்வராஜ் பக்கத்து மாவட்டத்துக் காரர். மதுரை மத்திய சிறையில் அனைத்துப் படிநிலைகளிலும் 20 வருடங்களுக்கு மேல் பணியாற் றியவர். பெண்கள் விஷயத்தில் இவருடைய பலவீனத்துக்கு அப்போது தீனிபோட்டவர், 14 வயது சிறுமியை தன்னுடைய பாலியல் வேட்கைக்கு இரையாக்கத் துடித்து தற்போது போக்சோ வழக் கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் உதவி ஜெயிலர் பாலகுருசாமி.
சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அப்போது செல்வராஜுக்கு டிரைவராக இருந்தார் பாலகுருசாமி. வழக்கம்போல் சிறைவாசி ஒருவரது மனைவி யைத் தள்ளிக்கொண்டு போனார். அந்த அறை யில் காத்திருந்தார் செல்வராஜ். பாலகுருசாமி செய்த பலான ஏற்பாட்டினால் அதிர்ச்சி யடைந்த அந்தப் பெண் அரைகுறை ஆடை யுடன் தப்பித்து ரோட்டுக்கு ஓடிவந்தார். இக்காட்சி, காவல்துறை ரோந்து வாகனத்தில் இருந்த காவலர்களின் கண்ணில்பட, கரிமேடு காவல்நிலையத்துக்கு அந்தப் பெண் ணை அழைத்துச் சென்றனர். அவள் தந்த வாக்கு மூலத்தின் அடிப் படையில் அதி காரியான செல்வ ராஜும், டிரை வர் பாலகுரு சாமியும் விசா ரிக்கப்பட்டனர். காக்கிக்கு காக்கி கை குலுக்கிக்கொண்டதால், வழக்கிலிருந்து இருவரும் தப்பித்தனர். அன்றைக்கே பாலகுருசாமி சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தால், பள்ளி மாணவிக்கு வலைவிரித்து, அந்தக் குடும்பத்துப் பெண்ணிடம் செருப்படி வாங்கி, வீடியோவில் பதிவான சம்பவம் நடந்திருக்காது.
மாற்றலாகி வந்து உயர் பொறுப்பில் அரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அமர்ந் தார். அப்போது செல்வராஜ் கூடுதல் கண் காணிப்பாளராகவும் சிறை அலுவலர் பொறுப் பிலும் இருந்தார். ராஜவேலு என்பவருக்கு ஸ்டோர் கீப்பர் பணி. ஆனாலும், அமைச்சர் களின் அலுவலகங்களில் பணிபுரிவோர் தலை வராக மதிக்கும் அளவுக்கு செல்வாக்கானவர். அரசியின் கணவர் புற்றுநோயினால் இறந்து விடுகிறார். வெற்றிடத்தை நிரப்புவதற்கும், உய ரதிகாரியின் கரம் பிடிப்பதற்கும், செல்வ ராஜுக்கும் ராஜவேலுக்கும் இடையே போட்டா போட்டி. உயரதிகாரியை வாழ்க்கைத்துணை ஆக்கிக்கொண்டால் சகலத்திலும் பங்கு கிடைக்குமென பாலியல் வெறிபிடித்து ஆடி னார்கள். இறுதி வெற்றி ராஜவேலுவுக்கே. சமயபுரத்துக்கு அழைத்துசென்று அரசியின் கழுத்தில் தாலி கட்டினார் ராஜவேலு. நடந்த ரகசிய திருமணத்துக்கு அழுத்தமான ஆதாரம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தன்னிடம் தோற்றுப்போன செல்வராஜுடன் ஒரே இடத் தில் வேலை செய்வது, ராஜவேலுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது. திருச்சி சிறைக் காவலர் பயிற்சி பள்ளிக்குத் தூக்கியடிக்கப் படுகிறார் செல்வராஜ். முன்புபோல் சொந்த மாவட்டத்துக்கு அருகி லுள்ள மாவட்டத்தில் பணிபுரியவேண்டும் என்ற தவிப்பில் இருந்த செல்வராஜ், கண்காணிப் பாளராகப் பதவி உயர்வு கிடைத்ததும், அரசி பணிபுரியும் மத் திய சிறைச்சாலைக்கு வரத் துடித்தார். சகல அஸ்திரங்களையும் பிரயோகித்த அரசியும் ராஜவேலுவும், செல்வராஜை சேலம் மத்திய சிறைக்குத் தள்ளிவிட்டனர்.
செல்வராஜுக்கு எதிரான அக்கப்போர் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கோவை சிறைத் துறை டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி ஓய்வுபெறு கிறார். அந்த இடத்துக்கு வருவதற்கு அரசி உள் ளிட்ட நால்வரிடையே போட்டி நிலவியது. இவர்களில் முதல் மற்றும் இரண்டாவது இடத் தில் உள்ள இருவரைப் பின்னுக்குத் தள்ளு வதற்காக, விதி 17(பி) இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வேலைகள் நடந்தன. டி.ஐ.ஜி. பதவி உயர்வுக்காக நடந்த அந்தப் பஞ்சா யத்தில் ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுத் தனர். மதுரை மத்திய சிறைச்சாலை ஊழல் விவகாரம் வெளிவர ஆரம்பித்தது. ராஜவேலு இறந்துவிடுகிறார். அரசியால் அங்கு தொ டர்ந்து பணிபுரிய முடியவில்லை. தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றிய இடத்திலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிச் சென்றார். இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்த செல்வராஜ், அரசி அமர்ந்த நாற்காலியில், தான் வெகு காலம் பணியாற்றிய சிறைச்சாலைக்கு வந்து அமர்ந்தார். அரசி மற்றும் தன்னைப் பந்தாடிய அதிகாரிகளை வஞ்சம் தீர்ப்பதற்காக, கைதி களின் உற்பத்தித் தொழிலில் நடந்த மோசடி களைத் துருவினார். அரசி, தான் பணியாற்றிய இடத்தின் மேலதிகாரி, சென்னை சரக மேலதி காரி ஆகிய மூவருக்கும் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர் மூலம் எடுத்துவிட, 2021ல் அதி காரிகளின் பெயர்கள் செய்திகளில் அடிபட் டன. மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக, தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததும், சிறப்பு தணிக்கைக் குழு ஆய்வுக்காக மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.
ஊழல் விவகாரத்தில் சிறைத்துறையின் பெயர் மோசமாக அடிபடுவதற்கு முழுமுதல் காரணம் செல்வராஜ்தான் என்பது தெரியவரு கிறது. தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கியபடியே இருக்கிறார் என்று செல்வ ராஜ் மீது சிறைத்துறை நறநறக்க.. கடலூருக்கு மாறுதலாகிச் செல்கிறார். ஓய்வுபெறும் நிலை யில், தனது சொந்த மாவட்டத்துக்குப் பக்கத்து மாவட்டத்தில், தான் நினைத்தபடி பணியைத் தொடரமுடியவில்லையே என்று ஆத்திரப்பட் டார் செல்வராஜ். இதற்குக் காரணமான மேலதி காரியின் மீதான கோபம் அதிகரித்தது. தனக்குக் கொடுப்பினை இல்லாத மத்திய சிறையில் பணிபுரியும் யாரையும் நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று முடிவெடுத்தார். முன்பு அறிவுடைநம்பியின் டி.ஐ.ஜி. இடத்துக்கு வர முயற்சித்து 17(பி) பழிவாங்கலுக்கு ஆளானவர் களைத் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டார். டில்லி வரையிலும் நெருக்கமான தொடர்புள்ள ஐ.பி.எஸ். அதிகாரி தனது சம்பந்தி என்பது செல்வராஜுக்கு கூடுதல் பலம். இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் ரூ.1,63,64,222-க்கு நடந்துள்ள முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட 11 பேர் மீது கடந்த 12-12-2024 அன்று வழக்கு பதிவு செய்தது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை.
தணிக்கை ஆய்வின்படி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகள் அனைத்திலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சிலரது காய் நகர்த்தலால், மதுரை மத்திய சிறைச்சாலையில் பணியாற்றிய ஊழல் அதிகாரிகள் மட்டுமே நட வடிக்கைக்கு ஆளாவதும், மற்ற சிறைச்சாலை களில் நடந்த ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், நீதியின் கண்களைத் திட்டமிட்டே மறைக்கின்ற செயலாக அல்லவா இருக்கிறது.